This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Saturday, October 10, 2015


அதிரை மனிதநேய மக்கள் கட்சி தலைமைக்கு ஆதரவு!

மனிதநேய மக்கள் கட்சியின் புதிய தலைவராக பேராசிரியர் ஜவாஹிருல்லா, பொதுச்செயலாளராக அப்துல் சமது, பொருளாராக ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமைக்கு ஆதரவு தெரிவித்து அதிரை மமகவின் பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது!

நன்றி: அதிரை நியூஸ்

Thursday, September 17, 2015

தோல்விகளுக்கு நன்றி

     தோல்விகளுக்கு நன்றி
தோல்விகள் நமக்கான பாடங்கள் என்று தெரிந்தும் தோல்விகளைப்பற்றி நாம் அதிகம் நினைப்பதில்லை. வெற்றியைக் கொன்றாட நினைக்கிறோம் தோலிவியை மறக்க நினைக்கிறோம் தோல்விதரும் வலிதான் காரணம். தோல்வியை நினைக்கையில் நம்மையும் அறியாமல் சிறுமைப்பட்டு போகிறோம். வேளியில் சொல்லாமல் குறுகிப்போகிறோம். இது எனக்கு நடந்திருக்க வேண்டாம் என்று நினைக்கிறோம். மூடிமறைத்தல்:
காரணம் இல்லாமல் காரியம் இல்லை தோல்வி வருவது நமக்கு பாடம் புகட்டத்தான். அந்தப்பாடத்தை வலிமையாகக் கற்றுத்தர தோல்வியால்தான் முடியும். வெற்றியால் வரும் பாடங்கள் அகந்தையை வளர்க்கும் தோல்விதரும் பாடங்கள் அகந்தையை அழிக்கும் நம் அகந்தையை அழிக்க நாம் எவ்வளவு தூரம் அனுமதிப்போமா? பொய்யான காரணங்கள் அகந்தையை உற்பத்தி செய்யும். ஒரு தற்காலிக அமைதியை உருவாக்கி அதில் தோல்வி அனுபவத்தை மூடி வைக்கும் அந்த மூடி மறைத்தலில் தோல்வி நமக்கு கற்பிக்கும் பாடங்களும் மனதில் ஏறாமல் போய்விடும்.
                         தோல்வி நிலையானதா
வெற்றியாளர்களின் சாகசங்களை கேட்பதில் 100ல் ஒரு பங்கு கூடத்தோல்வியாளர்களின் அனுபவங்களை நாம் கேட்பதில்லை வெற்றி பெற்றவர்களின் பழைய தோல்வி அனுபவங்கள் கூட சாகசங்களாகத்தான் பார்க்கப்படும். நிறைய தோல்விகளைச் சந்தித்தவர்களின் அனுபவங்கள் வளமான வாழ்க்கைப்பாடங்கள் அனைத்து தோல்விகளையும் நாமே பெற்றுக்கொள்வதைவிட பிறர் தோல்விகளில் பாடம் கற்பிப்பது புத்திசாலித்தனம். தோல்விஅடைந்தவர்களை உடனே உதாசினப்படுத்துவது போன்ற மடத்தனம் எதுவுமில்லை. முதலில் வெற்றி தோல்வியை வைத்து மனிதர்களை மதிப்பிடுவது மலிவான செயல். இரண்டாவது தோல்வி என்பது நிரந்தர நிலையில்லை ஒரு வெற்றி கூடச்சமயத்தில் வாழ்கையின் உச்சத்திற்கு இட்டுச் செல்லலாம்.தோல்வியாளர்கள் தங்கள் பாடங்களை பகிரத் தயாராக இருப்பார்கள் ஆறுதல் கிடைக்கக் கூடப்பகிரலாம் ஆனால் வெற்றி பெற்றவர்கள் பலர் தங்கள் தோல்வி அனுபவங்களை பகிரமாட்டார்கள.; ஆதலால் தோல்விகள் பாடங்களை என்றால் தோல்வி அடைந்தவர்கள் ஆசிரியர்கள். நாம் ஏன் தோல்விகளை கண்டு பயந்து நடுங்குகிறோம் சிறுவயது முதலே தவறுகளையும் தோல்விகளையும் ஒதுக்கத்தான் ஒதுக்கத்தான் சொல்லித்தந்திருக்கிறார்கள்
                                                            வெற்றியின் மிதான வெறி
சரியும் தவறும் கலந்துதான் வாழ்க்கை வெற்றியும் தோல்வியும் இணைந்திருப்பதுதான் இயல்பு ஒன்றை மட்டும் கொண்டவர்கள் யாரும் இல்லை வெற்றியை மட்டும் தனியாகப்பிரித்து முழுமையாக உரிமை கொண்டாடிவிடலாம் என்று நினைப்பதினால் தான் இன்று வெற்றியை விற்கும் சந்தைகள் பெருகிவிட்டன.இதைப்படி இதைக்குடி இதைவாங்கு இங்கு செல் இவரிடம் போ என்றெல்லாம் பிரித்து பிரித்து சந்தையைப் பிடித்துகொண்டதன் காரணம் நமக்கு வெற்றியினன் மீது இருக்கிற வெறிதான் படிக்காதவர்கள் நல்ல மதிப்பெண்கள் வாங்காதவர்கள் நல்ல வேளைகிடைக்காதவர்கள்இ பணம் சம்பாதிக்காதவர்கள் சொத்து சேர்க்காதவர்கள் இவர்கள் எல்லாம் தோல்வியடைந்தவர்கள் என்று நம்ம ஆரம்பித்துவிட்டோம் அப்படிஎன்றால் படிப்பு வேலை சொத்து சேர்த்தவர்கள் முழுமையாக வெற்றியாளர்களா பின் ஏன் இவர்களில் பலரிடம் இத்தனை வியாதிகள் விவகாரத்துகள் விவகாரங்கள் இவையெல்லாம் தோல்விகள் இல்லையா?
                        நம்பிக்கையே மருந்து
யோசித்துப்பார்த்தால்  வெற்றியும் தோல்வியும் அவரவர் மதிப்பீடு சார்;ந்தவை வாழ்கையில் எதை நோக்குகிறோமோ அது கிடைத்தால் வெற்றி அது தவறினாலோ அல்லது தாமதமானலோ அதை தோலிவி என்று சொல்கிறோம் அவ்வளவுதான். எந்த தோல்வியும் பெரிதல்ல அதைப் பூதாகரமாக ஆக்கிவிடுவது நம் எண்ணங்கள்தான் அந்தந்தப்பருவத்தில் பெரிதாக தெரியும் தோல்விகள் தூரமும் கடந்து நோக்குகையில் அற்ப விஷயமாகத் தெரியும். மதிப்பெண்கள் குறைவதும் காதல் கை கூடாததும் அந்தந்தக் காலத்தில் வாழ்க்கையை ஸ்தம்பிக்க வைப்பவை ஆனால் அதைக்கடந்தும் வாழ்கை ஓடும் அதைவிடச்சிறப்பான நிகழ்வுகளும் வாய்ப்புகளும் வாய்க்கும் நாளைப்பற்றியை நம்பிக்கைதான் நேற்றைய காயங்களுக்கு மருந்து.
                         தோல்விகளுக்கு நன்றி:
மரணம் நிகழ்ந்த வீட்டிலும் காபி குடிக்கிறார்கள் விபத்து நடந்த இடத்தில் சில நிமிடங்களில் போக்குவரத்து சகஐமாகிறது இயற்கை சீற்றம் நிகழ்ந் இடம் சுற்றுலா மையம் ஆகிறது எல்லா இழப்புகளும் ஏதோ ஒரு விதத்தில் ஈடு செய்யப்படுகின்றன.
உங்களுக்கு முன்பாக மலையேறுபவர் தடுக்கி விழும்போது அங்கு வழுக்கல் அதிகம் பார்த்துப்போ என்று சொல்லாமல் சொல்கிறார் உங்கள் விபத்தை தடுக்கிறார்.
உங்களுக்கு கிடைத்த அனைத்து தோல்விகளுக்கும் நன்றி செலுத்துங்கள் உங்கள் தோல்விக்கு காரணமான அனைவரையும் மனதாரப்பாராட்டி நன்றி சொல்லுங்கள். நீங்கள் செல்லும் பாதையில் உங்களுக்கு முன்பாக சென்று தோற்றவர்கள் அனைவரையும் நினைவு கூறுங்கள் வெற்றியை தலைக்கு மேலே எடுத்துக்கொள்ள வேண்டாம் தோல்வியை மனதுக்குள் எடுத்துக்கொள்ள வேண்டாம் இரவும் பகலும் போல வெற்றி தோல்வி மாறி மாறி வரும் வாழ்க்கையை ரசிக்கக் கற்றுக் கொள்வோம்.¬
நன்றி தி ஹிந்து   பரிந்துரை  அப்துற் ரஷீது ஹசனி 

(Multi Language Service)

MULTI LINK ASSOCIATE