Saturday, October 10, 2015
Thursday, September 17, 2015
தோல்விகளுக்கு நன்றி
12:32 AM
No comments
தோல்விகளுக்கு நன்றி
தோல்விகள் நமக்கான பாடங்கள் என்று தெரிந்தும் தோல்விகளைப்பற்றி நாம் அதிகம் நினைப்பதில்லை. வெற்றியைக் கொன்றாட நினைக்கிறோம் தோலிவியை மறக்க நினைக்கிறோம் தோல்விதரும் வலிதான் காரணம். தோல்வியை நினைக்கையில் நம்மையும் அறியாமல் சிறுமைப்பட்டு போகிறோம். வேளியில் சொல்லாமல் குறுகிப்போகிறோம். இது எனக்கு நடந்திருக்க வேண்டாம் என்று நினைக்கிறோம். மூடிமறைத்தல்:
காரணம் இல்லாமல் காரியம் இல்லை தோல்வி வருவது நமக்கு பாடம் புகட்டத்தான். அந்தப்பாடத்தை வலிமையாகக் கற்றுத்தர தோல்வியால்தான் முடியும். வெற்றியால் வரும் பாடங்கள் அகந்தையை வளர்க்கும் தோல்விதரும் பாடங்கள் அகந்தையை அழிக்கும் நம் அகந்தையை அழிக்க நாம் எவ்வளவு தூரம் அனுமதிப்போமா? பொய்யான காரணங்கள் அகந்தையை உற்பத்தி செய்யும். ஒரு தற்காலிக அமைதியை உருவாக்கி அதில் தோல்வி அனுபவத்தை மூடி வைக்கும் அந்த மூடி மறைத்தலில் தோல்வி நமக்கு கற்பிக்கும் பாடங்களும் மனதில் ஏறாமல் போய்விடும்.தோல்வி நிலையானதா
வெற்றியாளர்களின் சாகசங்களை கேட்பதில் 100ல் ஒரு பங்கு கூடத்தோல்வியாளர்களின் அனுபவங்களை நாம் கேட்பதில்லை வெற்றி பெற்றவர்களின் பழைய தோல்வி அனுபவங்கள் கூட சாகசங்களாகத்தான் பார்க்கப்படும். நிறைய தோல்விகளைச் சந்தித்தவர்களின் அனுபவங்கள் வளமான வாழ்க்கைப்பாடங்கள் அனைத்து தோல்விகளையும் நாமே பெற்றுக்கொள்வதைவிட பிறர் தோல்விகளில் பாடம் கற்பிப்பது புத்திசாலித்தனம். தோல்விஅடைந்தவர்களை உடனே உதாசினப்படுத்துவது போன்ற மடத்தனம் எதுவுமில்லை. முதலில் வெற்றி தோல்வியை வைத்து மனிதர்களை மதிப்பிடுவது மலிவான செயல். இரண்டாவது தோல்வி என்பது நிரந்தர நிலையில்லை ஒரு வெற்றி கூடச்சமயத்தில் வாழ்கையின் உச்சத்திற்கு இட்டுச் செல்லலாம்.தோல்வியாளர்கள் தங்கள் பாடங்களை பகிரத் தயாராக இருப்பார்கள் ஆறுதல் கிடைக்கக் கூடப்பகிரலாம் ஆனால் வெற்றி பெற்றவர்கள் பலர் தங்கள் தோல்வி அனுபவங்களை பகிரமாட்டார்கள.; ஆதலால் தோல்விகள் பாடங்களை என்றால் தோல்வி அடைந்தவர்கள் ஆசிரியர்கள். நாம் ஏன் தோல்விகளை கண்டு பயந்து நடுங்குகிறோம் சிறுவயது முதலே தவறுகளையும் தோல்விகளையும் ஒதுக்கத்தான் ஒதுக்கத்தான் சொல்லித்தந்திருக்கிறார்கள்
வெற்றியின் மிதான வெறி
சரியும் தவறும் கலந்துதான் வாழ்க்கை வெற்றியும் தோல்வியும் இணைந்திருப்பதுதான் இயல்பு ஒன்றை மட்டும் கொண்டவர்கள் யாரும் இல்லை வெற்றியை மட்டும் தனியாகப்பிரித்து முழுமையாக உரிமை கொண்டாடிவிடலாம் என்று நினைப்பதினால் தான் இன்று வெற்றியை விற்கும் சந்தைகள் பெருகிவிட்டன.இதைப்படி இதைக்குடி இதைவாங்கு இங்கு செல் இவரிடம் போ என்றெல்லாம் பிரித்து பிரித்து சந்தையைப் பிடித்துகொண்டதன் காரணம் நமக்கு வெற்றியினன் மீது இருக்கிற வெறிதான் படிக்காதவர்கள் நல்ல மதிப்பெண்கள் வாங்காதவர்கள் நல்ல வேளைகிடைக்காதவர்கள்இ பணம் சம்பாதிக்காதவர்கள் சொத்து சேர்க்காதவர்கள் இவர்கள் எல்லாம் தோல்வியடைந்தவர்கள் என்று நம்ம ஆரம்பித்துவிட்டோம் அப்படிஎன்றால் படிப்பு வேலை சொத்து சேர்த்தவர்கள் முழுமையாக வெற்றியாளர்களா பின் ஏன் இவர்களில் பலரிடம் இத்தனை வியாதிகள் விவகாரத்துகள் விவகாரங்கள் இவையெல்லாம் தோல்விகள் இல்லையா?
நம்பிக்கையே மருந்து
யோசித்துப்பார்த்தால் வெற்றியும் தோல்வியும் அவரவர் மதிப்பீடு சார்;ந்தவை வாழ்கையில் எதை நோக்குகிறோமோ அது கிடைத்தால் வெற்றி அது தவறினாலோ அல்லது தாமதமானலோ அதை தோலிவி என்று சொல்கிறோம் அவ்வளவுதான். எந்த தோல்வியும் பெரிதல்ல அதைப் பூதாகரமாக ஆக்கிவிடுவது நம் எண்ணங்கள்தான் அந்தந்தப்பருவத்தில் பெரிதாக தெரியும் தோல்விகள் தூரமும் கடந்து நோக்குகையில் அற்ப விஷயமாகத் தெரியும். மதிப்பெண்கள் குறைவதும் காதல் கை கூடாததும் அந்தந்தக் காலத்தில் வாழ்க்கையை ஸ்தம்பிக்க வைப்பவை ஆனால் அதைக்கடந்தும் வாழ்கை ஓடும் அதைவிடச்சிறப்பான நிகழ்வுகளும் வாய்ப்புகளும் வாய்க்கும் நாளைப்பற்றியை நம்பிக்கைதான் நேற்றைய காயங்களுக்கு மருந்து.
தோல்விகளுக்கு நன்றி:
மரணம் நிகழ்ந்த வீட்டிலும் காபி குடிக்கிறார்கள் விபத்து நடந்த இடத்தில் சில நிமிடங்களில் போக்குவரத்து சகஐமாகிறது இயற்கை சீற்றம் நிகழ்ந் இடம் சுற்றுலா மையம் ஆகிறது எல்லா இழப்புகளும் ஏதோ ஒரு விதத்தில் ஈடு செய்யப்படுகின்றன.
உங்களுக்கு முன்பாக மலையேறுபவர் தடுக்கி விழும்போது அங்கு வழுக்கல் அதிகம் பார்த்துப்போ என்று சொல்லாமல் சொல்கிறார் உங்கள் விபத்தை தடுக்கிறார்.
உங்களுக்கு கிடைத்த அனைத்து தோல்விகளுக்கும் நன்றி செலுத்துங்கள் உங்கள் தோல்விக்கு காரணமான அனைவரையும் மனதாரப்பாராட்டி நன்றி சொல்லுங்கள். நீங்கள் செல்லும் பாதையில் உங்களுக்கு முன்பாக சென்று தோற்றவர்கள் அனைவரையும் நினைவு கூறுங்கள் வெற்றியை தலைக்கு மேலே எடுத்துக்கொள்ள வேண்டாம் தோல்வியை மனதுக்குள் எடுத்துக்கொள்ள வேண்டாம் இரவும் பகலும் போல வெற்றி தோல்வி மாறி மாறி வரும் வாழ்க்கையை ரசிக்கக் கற்றுக் கொள்வோம்.¬
நன்றி தி ஹிந்து பரிந்துரை அப்துற் ரஷீது ஹசனி
(Multi Language Service)
MULTI LINK ASSOCIATE
Saturday, October 26, 2013
அதிரை ஈத் மிலன் கமிட்டியின் நன்றி அறிவிப்பு !
7:21 PM
No comments
அளவற்ற அருளாளனும் நிகரற்ற கிருபையாளனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
கடந்த 20.10.2013 ஞாயிற்றுக்கிழமை அதிரை லாவண்யா மஹாலில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி, பெருநாள் சந்திப்பு, கலந்துரையாடல் மற்றும் விருந்தோம்பல் நிகழ்ச்சி இறைவன் அருளால் மிகச் சிறப்பாக நடந்தேறியது, அல்ஹம்து லில்லாஹ்... அது சமயம் கலந்து கொண்ட பல சமுதாயத்தை சார்ந்த அனைவருக்கும் ஈத் மிலன் கமிட்டி சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்நிகழ்ச்சிக்கு பெருமளவில் பொருளாதார உதவி புரிந்த வளைகுடா வாழ் அதிரை சகோதரர்களுக்கும் குறிப்பாக அமீரக மற்றும் சவூதி வாழ் அதிரை சகோதரர்களுக்கும், மேலும் ஆஸ்திரேலியா & இலண்டன் வாழ் அதிரையர்களுக்கும் மற்றும் அனைத்து வெளிநாடு வாழ் அதிரை சகோதரர்களுக்கும் அதிரை ஈத் மிலன் கமிட்டியின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்கள் அனைவருக்கும் ஈருலகிலும் நல்லருள் புரிவானாக.
இந்நிகழ்ச்சியின் நோக்கம், பிற சமுதாயத்தினர் மத்தியில் இஸ்லாம் பற்றிய தவறான புரிந்துணர்வுகளைக் களைந்து, அவர்களுக்கு இஸ்லாத்தைப் பற்றிய நற்போதனைகளை எடுத்துக் கூறுவதும், இஸ்லாமியர்களுக்கும் பிற சமுதாயத்தினருக்குமிடையே உள்ள புரிந்துணர்வை வளர்த்து, நமதூரிலும் அதன் சுற்று வட்டாரத்திலும் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நன்னோக்கத்தில் நமதூர் இளைஞர்களின் மனதில் உதித்ததே இந்த ஈத் மிலன் நிகழ்ச்சி.
சமீப காலமாக, அதிரையின் ஒரு சில பகுதிகளைச் சார்ந்த சகோதரர்கள் பெருநாட்கள் தோறும் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வதற்கு ஏதுவாக நம் சமுதாயச் சகோதரர்களை மட்டும் அழைத்து விருந்தளிப்பது வழக்கமாக கொண்டுள்ளனர். அதேபோல் கடந்த நோன்புப்பெருநாளைத் தொடர்ந்து நிகழ்ந்த விருந்தில் கலந்து கொண்ட நம் இளைஞர்கள் சிலரின் மனதில் ஏற்பட்ட ஆர்வத்தின் காரணமாக, இதுபோன்ற விருந்தைப் அனைத்து மக்களுக்கும் பயனுள்ளதாக மாற்றவேண்டும் என்று கருதி, அன்றிரவே ஒத்த கருத்துடைய, இயக்கம் மற்றும் அரசியல் சாராத மார்க்கப் பிடிப்புள்ள இளைஞர்கள் ஒன்றிணைந்து, ஓர் ஆலோசனை அமர்வை ஏற்படுத்தி, அதன் முடிவில் இனி வரும் காலங்களில் இது போன்ற பெருநாட்களில் அனைத்து மத அன்பர்களையும் அழைத்துப் பெருநாள் சந்திப்பை ஏற்படுத்துவதென்றும், அதில் அதிரை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் அமைந்துள்ள கிராமங்களின் பஞ்சாயத்து நிர்வாகிகள், பள்ளி & கல்லூரி ஆசிரியர்கள், முன்னாள் பள்ளி கல்லூரி வகுப்புத்தோழர்கள், அரசு அலுவலர்கள், வங்கி ஊழியர்கள், பத்திரிக்கையாளர்கள், அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள், நாம் அன்றாடம் சந்திக்கக்கூடிய பல தரப்பட்ட மக்கள், உள்ளிட்ட பல தரப்பட்ட பிற சமுதாய அன்பர்களை அழைத்து, கலந்துரையாடல் மற்றும் விருந்தோம்பல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்வதென முடிவெடுக்கப்பட்டது.
இந்த அதிரை ஈத் மிலன் கமிட்டிக்கு இயக்கம் மற்றும் அரசியல் சார்பற்ற பல தரப்பட்ட இளைஞர்களைத் தன்னார்வலர்களாகக் கொண்டு, கடந்த ரமலான் முடிந்ததிலிருந்து பல ஆலோசனை அமர்வுகள் நடத்தி, அதில் கீழ்க் காணும் முடிவுகள் எடுக்கப்பட்டன:
1. 2013-ம் வருடம் ஹஜ்ஜுப் பெருநாளைத் தொடர்ந்து வரக்கூடிய விடுமுறை தினங்களில் இந்த நிகழ்ச்சியை நடத்துவதெனவும்,
2. இந்நிகழ்ச்சிக்குத் தேவைப்படக்கூடிய பொருளாதாரத்தை வெளிநாடுவாழ், வெளியூர்வாழ் மற்றும் உள்ளூர்வாழ் அதிரையர்களிடம் வசூலிப்பது, மேலும் தனிப்பட்ட நபரிடம் மட்டும் இந்நிகழ்ச்சிக்குத் தேவையான தொகையைப் பெறக்கூடாது எனவும், காரணம், தனிப்பட்ட நபரின் கருத்துத் திணிப்பிற்கு உள்ளாக நேரிடும் என்றும் அதைத் தவிர்ப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டது. மேலும் தேவைப்படும் தொகைக்கு மிகுதியாக வசூலிப்பதில்லை எனவும் முடிவு செய்யப்பட்டது.
3. இந்நிகழ்ச்சியை எந்தவொரு தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கும் ஆளாகாத வகையில் ஏற்பாடு செய்வதெனவும் அதே சமயம் அனைத்து சமுதாயத்தினரையும் அழைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது,
அதனடிப்படையில், பல சகோதரர்களின் நீண்ட நாள் தியாக உழைப்பின் விளைவாக, அதிரை ஈத் மிலன் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக அல்லாஹ்வின் அருளால் நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.
நிகழ்ச்சியின்போது, பல பணிகளைக் குழுக்களாகப் பிரித்து, ஒவ்வொரு குழுக்களுக்கும் 10 பேர் வீதம் அனைத்து முஹல்லாக்களைச் சார்ந்த இளைஞர்களால் பணிகள் அனைத்தும் சிறப்பாகச் செய்து முடிக்கப்பட்டது, அல்ஹம்து லில்லாஹ்.
நிகழ்ச்சியின் தொடக்கமாக, சகோ. ஹாபிள் முஹம்மது சாலிஹ் இறைவசனம் ஓத, சகோ. ஜமீல் முஹம்மத் சாலிஹ் வரவேற்புரை நிகழ்த்த, சகோ. இப்ராஹீம் அன்சாரி தலைமையேற்க, சகோ. வழக்குரைஞர் A. முனாப் முன்னிலை வகித்து சிறப்பு அழைப்பாளர்களான மாவட்ட நீதிபதிகளை அறிமுகம் செய்து வைத்தார். சிறப்புப் பேச்சாளர்களாகக் கலந்துகொண்ட சென்னை புதுக்கல்லூரி வேதியல் பேராசிரியர் சகோ. பரீத் அஸ்லம், மற்றும் மௌலவி முஜிபுர் ரஹ்மான் உமரி ஆகியோர் சிறப்புரையாற்றி மாற்று மதச் சகோதர சகோதரிகளின் வினாக்களுக்கு பதிலளித்தார்கள். இறுதியாக அதிரை கா.மு கல்லூரி அரபித்துறை பேராசிரியர் முஹம்மது இத்ரீஸ் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்கள்.
இவ்விழாவில் நமதூரை சார்ந்த நேரில் மற்றும் தொலைபேசியின் மூலமாக அழைக்கப்பட்ட மாற்று மத அன்பர்கள் மற்றும் நம் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் உள்ளிட்ட 800 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் பொழுது, அவர்களை வரவேற்ற விதம் மேலும் அவர்களிடமிருந்து மேலான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் பெறுவதற்கு ஏதுவாக ஆலோசனைப் படிவத்தைக்கொடுத்து அமர வைத்தது வந்திருந்த அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
உணவு பரிமாற்றத்தின்பொழுது சைவ/அசைவ உணவு வகைகளை அவரவர் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் மனமாறப் பரிமாறியது, வந்திருந்த அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றது. மேலும் நம் சமுதாய இளைஞர்களின் தன்னலமற்ற சகோதர வாஞ்சையுடன் கூடிய உபசரிப்பு அனைவரையும் நெஞ்சம் நெகிழ வைத்தது,
நிகழ்ச்சியின் இறுதியில் அனைத்து மாற்றுமத அன்பர்களுக்கும் வாசனைத் திரவியங்கள், இனிப்பு வகை மற்றும் இஸ்லாத்தைப்பற்றிய அறிமுக புத்தகங்கள் அடங்கிய அன்பளிப்புப் பெட்டியொன்றும் வழங்கப்பட்டது.
அத்தனைக்கும் முத்தாய்ப்பாக, ஆலோசனைப் பெட்டியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட மாற்று மத அன்பர்களின் ஆலோசனைகளும் நிகழ்ச்சியை பற்றிய மேலான கருத்துக்களும் நமதூரில் சமூக நல்லிணக்கம் தழைத்தோங்க வழி வகுக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
அவைகளுள் சில கருத்துக்களும் ஆலோசனைகளும் கீழே தரப்பட்டுள்ளது;
செ. கோப்பெருஞ்சோழன், அன்னவாசல், சொன்னது...

இதுவரையில் என்னை பொருத்தவரையில் நடைபெறாத ஒரு மகிழ்ச்சியான சந்திப்பு, என் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு நிகழ்ச்சி, அனைவரும் சமத்துவம் என்று வாய்மொழியாக பேசுபவர்கள் மத்தியில் இது உண்மை என்று நிகழ்த்தி காட்டியிருக்கிறார்கள். நன்றி. எல்லா பிரச்சனைகளும் முதலில் பள்ளியில் தான் ஏற்படுகிறது, முதலில் பள்ளி மாணவர்களுக்கு மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு பெரிய நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து மாணவர்களின் மனப்போக்கை மாற்ற வேண்டும்.
N.R.ரெங்கராஜன், சட்டமன்ற உறுப்பினர், பட்டுக்கோட்டை, சொன்னது....
மனிதநேயம், சமூக நல்லிணக்கம் ஒங்க பயனடையும் நிகழ்ச்சி.
அனைவரிடத்தில் ஒற்றுமை மனப்பான்மை வளர வேண்டும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும்.
D. ரமேஷ், தமிழன் T.V சொன்னது...
இந்த நிகழ்ச்சியின் வாயிலாக மதம் வேறாக இருந்தாலும் இறைவன் மட்டும் ஒருவனே என்ற செய்தி மிக சிறப்பாக இருந்தது.
இந்த மக்கள் சந்திப்பு நமது ஊரை மட்டும் இல்லாமல் அனைத்து ஊர் மக்களுக்கும் சேர்ந்து அடைய வேண்டும்.
G.பிரபாகர், அதிரை, சொன்னது....
அனைவரையும் ஒற்றுமையோடு சிந்தித்து வாழ வழிவகுத்த இந்த நிகழ்ச்சியை ஏற்படுத்தி கொடுத்தது எனது அருமை அதிரை நண்பர்களுக்கு நன்றி. அனைவரும் ஒற்றுமையோடு போட்டி,பொறாமை இன்றி வாழ வேண்டும்.
N.வேணுகோபாலன், ஆசிரியர், கா.மு.ஆ.மே.நி பள்ளி சொன்னது....
தற்காலத்தில் மிகவும் அவசியமான ஒரு கூட்டம் இது மிகவும் பாராட்டத்தக்கது. ஒவ்வொரு மாதமும் ஒருநாள் இதுபோன்ற கூட்டம் நடத்தினால் சமூக நல்லிணக்கம் நிச்சயம் வளரும்.
S.கார்த்திகேயன், அதிரை, சொன்னது....
இது போன்ற நிகழ்ச்சிகள் மதநல்லிணக்கத்தை மேம்படுத்தும் அதிரை ஈத் மிலன் கமிட்டிக்கு என்று நன்றிகள்.
இது போன்ற நிகழ்வுகள் ஆண்டுக்கு ஒன்றோ, இரண்டோதான் நடத்த முடியும் ஆனால் நாம் அன்றாடம் மதபேதம் பாராமல் உதவி கரம் நீட்ட வேண்டும்.
K. சொக்கலிங்க பத்தர், அதிரை, சொன்னது...
பல மத சமூக ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக யாவரும் பின் பற்ற வேண்டும்.
எல்லாம் வல்ல இறைவன் நம்மிடம் ஷைத்தான் வராமல் இருக்க இறைவனிடம் துவா கேளுங்கள்.
பேரா. M.A. முஹம்மது அப்துல் காதிர், முன்னாள் முதல்வர், கா.மு. கல்லூரி, சொன்னது...
சமூக நல்லிணக்கம், முஸ்லிம்களாகிய நம்மிடத்தில்தான் முதலில் வர வேண்டும், ஏற்படுத்த முயல வேண்டும். இது போன்ற நிகழ்ச்சி ஆண்டாண்டு தோறும் நடைபெற வேண்டும். இந்த நிகழ்ச்சியின் ஏற்பாடுகளும், அமைப்பும் மிக மிகச்சிறப்பு.
S.பாலசுப்ரமணியன், அதிரை, சொன்னது....
அனைத்து சமூகத்தையும் ஒன்றுபட செய்து ஒற்றுமை சமூதாய சகோதரத்துவத்தை ஒன்றுபட செய்து இவ்விழாவை ஏற்பாடு செய்து கொடுத்த அனைத்து இஸ்லாமிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
இதுபோன்ற என்றும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் வேற்றுமை இல்லாமல்.
V.காந்தி, அதிரை, சொன்னது....
இந்த நிகழ்ச்சி என்னுடைய மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகின்றது சாதி,மதம், வேறுபாடின்றி எல்லோரும் அண்ணன் தம்பி போல் வாழவேண்டும். நம் எல்லோரையும் படைத்த ஆண்டவன் ஒருவன்தான். அப்படி இருக்கும் பொழுது நாம்தான் பிரிவினையோடு வாழ்ந்துவருகிறோம் இதை மனதில் வைக்க நாம் ஒற்றுமையாக வாழவேண்டும்.
A.தாஜுதீன், மல்லிபட்டினம், சொன்னது...
காலத்திற்கேற்ப இந்துபோன்ற நிகழ்ச்சிகள் மூலம் அனைத்து மதத்தினர்களையும் ஒன்று இணைத்து கருத்துக்கள் பரிமாறிக்கொள்வதன் மூலம் சமத்துவமும், சகோதரத்துவமும், ஒற்றுமையும் நாட்டின் வளர்ச்சியையும் காணலாம். இதுபோன்ற விழாக்கள் ஒவ்வொரு ஊரிலும் கூட்டம் கூட்டி அனைத்து சமுதாய மக்களையும் ஒன்றிணைத்து பிரிவினைவாதத்தின் சூழ்ச்சியில் விழாமல் பாதுகாக்க வேண்டும்.
சி. சுந்தர்ராஜு, ஆச்சாரி, சொன்னது...
முஸ்லீம், இந்து, கிறிஸ்டியன் எல்லோரும் எப்போதும் ஒற்றுமையாக வாழ வேண்டும் அதுதான் என்னுடைய விருப்பம் என்னுடைய ஆசை.
இந்த விழாவை ஏற்பாடு செய்து நடத்தியதற்கு என்னுடைய மனமார்ந்த நன்றி.
P.சங்கர், அதிரை, சொன்னது...
அனைத்து சமூகத்தினரையும் ஒன்றுபடுத்தியதற்க்கு இந்த சுப நிகழ்ச்சி எங்களுக்கு மகிழ்ச்சியை தந்தது நன்றி.இதேபோல் ஒரு நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெற்றால் நமதூர் பெருமை உலகம் முழுக்க பெருமை சேர்க்கும்.
ராகேஷ், ஜோய் அலுக்காஸ், ஜுவல்லரி, தஞ்சாவூர், சொன்னது...
Good, thank you for giving opportunity to participate in this noble event and also understand Islam, we all are human.
A.L. அஷ்ரப் அலி, அதிரை, சொன்னது...
இந்த நிகழ்ச்சி முதன் முறையாக அதிரையில் நடைபெறுகிறது இதன் மூலம் அனைவரையும் சந்திக்க ஒரு வாய்ப்பாக அமைந்து நல்ல கருத்துகளை கேட்கும் வாய்ப்பாக அமைந்தது.
இதே போன்று நிகழ்ச்சிகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளலாம்.
T. லெனின், பேராசிரியர், கா.மு.கல்லூரி, சொன்னது...
இந்த நிகழ்ச்சி சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு நாம் அனைவரும் இந்த மண்ணின் மைந்தர்கள், சகோதர சகோதரிகள் என்ற உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை மனப்பூர்வமாகவும் இதயப்பூர்வமகவும் மனம் மகிழ்ந்து ஏற்றுக்கொள்கிறேன். இதுபோல் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று தடவைகள் இந்த மாதிரி நிகழ்ச்சிகள் நடத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
A.முஹம்மது முகைதீன், அதிரை, சொன்னது...
பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு பாராட்டுக்கள், இது தாங்களுடைய முயற்சிக்கு கிடைத்த வெற்றி. ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடத்த இறைவன் நமக்கு ஒற்றுமையை தந்தருள்வானாக.
R. தனபால், அதிரை, சொன்னது...
அழைப்பிதழ் பெற்றபோது எல்லோரும் சிறியவர்களாக இருக்கிறார்கள் என்று எண்ணினேன், ஆனால் கலந்து கொண்டபோது இது போன்ற நிகழ்ச்சிகள் தேவை என்பதை உணர்ந்தேன்.
அதிரையில் உள்ள 21 வார்டுகளுக்கும் வார்டு 1-க்கு 2 நபர் வீதம் அமைப்பை ஏற்படுத்தவேண்டும்.
N.முஹம்மது ஜபருல்லாஹ், அதிரை, சொன்னது.
நல்ல ஒரு எடுத்துகாட்டு, எல்லா வருடமும் நடத்தக்கூடிய நிகழ்ச்சி.
ஊரில் உள்ள எல்லா முஹல்லாவும் ஒன்றுபட வேண்டும். எந்த முடிவாக இருந்தாலும் முஹல்லா அனைத்தும் சேர்ந்து எடுக்க வேண்டும், இயக்கங்கள் என்பது தேவையில்லை.
மேலே குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் நமக்கு உற்ச்சாகத்தையும், உத்வேகத்தையும் தந்திருந்தாலும், நாம் அல்லாஹ்வைத் துதித்து, அவனிடத்தில் பாவ மன்னிப்புக் கோருவோமாக..
இனி வரும் காலங்களிலும் நமதூர் அனைத்து சகோதரர்களும் ஒன்றினைந்து இந்நிகழ்ச்சியை நடத்த முன்வர வேண்டும்.
இப்படிக்கு,
அதிரை ஈத் மிலன் கமிட்டி
அதிராம்பட்டினம்

Saturday, November 10, 2012
அதிரை அருகே மதுக்கடைக்கு எதிராக மாபெரும் சாலை மறியல்
10:23 AM
No comments
அதிராம்பட்டினத்திலிருந்து மல்லிப்பட்டினம் நோக்கிச் செல்லும் கிழக்கு கடற்கரைச் சாலையில். ஏரிப்புறக்கரை பேருந்து நிறுத்தம் அருகே திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி அதிரை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் நாளை (11-11-2012) ஞாயிறு காலை 10:00 மணியளவில் ECR சாலையில் மறியல் செய்யப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி நிலையங்கள். மாணவியர் விடுதி மற்றும் குடியிருப்பு வீடுகள் இருக்கும் பகுதியில் திறக்கப்பட்டுள்ள மதுக்கடையினால் சமூக சீரழிவுகளும். போக்குவரத்து வாகன விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
ஊர்நலன் மற்றும் சமூக சீரழிவுக்கு எதிரான அனைவரும் இந்த அறவழி போராட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பையும் கண்டனத்தையும் அரசுக்கு தெரிவிக்க திரலாகக் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப் படுகிரார்கள்.
இப்படிக்கு.
மதுஒழிப்பு இயக்கம்
அதிராம்பட்டினம்
Subscribe to:
Comments (Atom)